திருச்சி மாவட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, “தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்பதற்கு பேச்சே இல்லை.
அதனை நான் விரும்பவும் இல்லை. வரும் சட்டமன்றத் தேர்தலில் ஸ்டாலின் வெற்றி பெறுவார் கண்டிப்பாக அதிக பெரும்பான்மையுடன் திமுக வெற்றி பெறும்.
அதனால் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போய்விடும். சனாதன சக்திகள் தமிழகத்தை கபளிகரம் செய்ய வேண்டும் என்று முனைந்து திட்டமிட்டு பாரதிய ஜனதா கட்சியும், தமிழகத்தில் இருப்போரும் தீவிரமாக முயற்சித்து வருகிறார்கள்.
அந்த முயற்சிகள் அனைத்தும் மண்ணோடு மண்ணாக தவிடுபொடியாகவும். திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் அதிருப்தி இருப்பதாக பரவி வரும் செய்திகள் அனைத்தும் வதந்திகள் இவ்வாறு அவர் கூறினார்.
