செய்தியாளர்களை சந்தித்து பேசிய புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி,  தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அகில இந்திய அளவில் பாரதிய ஜனதா கட்சியினுடைய தலைமை. தமிழ்நாட்டில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை.  2019 பாராளுமன்றத்திலயும்,  2021 சட்டமன்ற தேர்தலிலும் அது தான் இருந்தது.

இப்போ  இங்கே தலைமை தாங்க கூடியவர்களே நாங்க இல்லை என சொன்ன பிறகு, அதை பழையதாக பார்க்க முடியாது. புதியதாக தான் பார்க்க முடியும். எனவே அண்ணா திமுகவின் முடிவு அதுவாக இருந்தால் தேசிய ஜனநாயக கூட்டணி இன்று இல்லை என்று பொருளாகிவிடும்.

தலையே இல்லை என்றால் என்ன சொல்ல முடியும் ? ஒரு அரசன் வீழ்த்தப்பட்டால் நீங்க என்ன நாடு என்று சொல்ல முடியும். வேறு ஒரு ஆள் வர முடியும். அவர்களுடைய தலைமையில் தான் இங்கு கூட்டணி உருவாக்கப்பட்டது. நாங்க இல்லை என்கிறார்கள். அதை எப்படி எடுத்துக் கொள்ள முடியும்.

அண்ணா திமுக ஒரு முக்கிய முக்கியமான கட்சி. அவங்க தலைமையில் தான் தமிழ்நாட்டுல தேசிய ஜனநாயக கூட்டணி செயல்பட்டு வந்தது. விலகிக் கொண்டோம். எங்களுக்கு நாங்கள் அவர்களோடு உறவில்லை என்று சொல்லிவிட்டார்கள். கொஸ்டின் வராத போது அது இருக்குதா இல்லையா என்று எப்படி சொல்ல முடியும் நிலையற்ற தன்மை நிலவுகிறது நாங்கள் இல்லை என்று தலைமை தாங்கினவர்கள் சொல்லிவிட்ட பிறகு அந்த இடத்தில் யார் இருக்கிறார்கள் அதை யாரு லீட் பண்றாங்க அது என்ன அப்படிங்கறது டோட்டலா ஒரு பெரிய சந்தேகம்