நடிகர் விஜய்யின் கடைசி படமாக உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ வரும் ஜனவரி 9-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. ஆனால், படம் வெளியாவதற்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில், தணிக்கைச் சான்றிதழ் (Censor Certificate) கிடைப்பதில் இழுபறி நீடித்து வருவது படக்குழுவினரைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த மாதம் 19-ஆம் தேதி படத்தை பார்த்த தணிக்கைக்குழு, படத்தில் உள்ள சில ஆக்ரோஷமான அரசியல் வசனங்கள் மற்றும் காட்சிகளை நீக்கக் கோரியிருந்தது.
தணிக்கைக்குழு சொன்ன மாற்றங்களை உடனடியாகச் செய்துவிட்டு, மீண்டும் சான்றிதழுக்காகப் படக்குழு விண்ணப்பித்தது. மாற்றங்களைச் செய்த பிறகும், இன்னும் சில டெக்னிக்கல் காரணங்களைச் சுட்டிக்காட்டி தணிக்கைக்குழு சான்றிதழ் வழங்கத் தாமதம் செய்வதாகக் கூறப்படுகிறது.
விஜய் முழுநேர அரசியலில் இறங்கப் போவதால், இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள காரசாரமான அரசியல் காட்சிகள் தான் இந்தப் பிரச்சனைக்குக் காரணம் என்று சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. தணிக்கை சான்றிதழ் கிடைத்தால் மட்டுமே வெளிநாடுகளுக்குப் படங்களை அனுப்ப முடியும் என்பதால், ரிலீஸ் தேதி தள்ளிப்போகுமோ என்ற அச்சத்தில் ரசிகர்கள் உள்ளனர்.
