ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து இந்திய ராணுவம் “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் பதிலடி கொடுத்துள்ளது . அதன்படி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் அதிகாலை பயங்கரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

முப்படைகள் இணைந்து நடத்திய இந்த தாக்குதல் கோட்லி, பஹவல்பூர் முசாபராபாத் போன்ற இடங்களில் அமைக்கப்பட்டிருந்த பயங்கரவாதி முகாம்கள் மீது ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு ஐநா பொது செயலாளர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் கூறியதாவது, எல்லை கட்டுப்பாட்டு கோடு மற்றும் சர்வதேச எல்லையை தாண்டி இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது, ”இருநாட்டினரும் ராணுவ கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும். இரு நாட்டினருக்கும் இடையே ராணுவ மோதல் ஏற்பட்டால்  இந்த உலகம் அதனை தாங்காது”என்றும் கூறியுள்ளார். மேலும் இரு நாட்டு ராணுவமும் நிதானத்தை கடைபிடிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.