
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அண்ணன் எடப்பாடியாருடைய உத்தரவுக்கு இணங்க தமிழ்நாடு முழுவதும் இளைஞர், இளம் பெண்கள் பாசறை, மகளிர் குழு… அது மட்டுமல்லாமல் பூத் கமிட்டி… இது அமைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டு, தமிழ்நாடு முழுவதும் எழுச்சியோடு… ஒவ்வொரு மாவட்டத்திலும்… இன்றைக்கு குழுக்கள் அமைக்கின்ற பணி எழுச்சியோடு நடைபெற்று வருவதை தெரிவித்துக் கொள்கிறேன்.
அந்த அடிப்படையில் வட சென்னை தெற்கு – கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில்ராயபுரம் சட்டமன்ற தொகுதியில் பூத் கமிட்டி, மகளிர் குழு மட்டுமல்லாமல்இளைஞர், இளம் பெண்கள் பாசறை இது எல்லாம் அமைக்கின்ற பணி நடைபெற்றுவதை ஒட்டி தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்ட மேற்பார்வையாளர்கள் முன்னாள் அமைச்சர் பச்சையம்மாள் அவர்களும்,
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு காமராஜர் அவர்களும் மேற்பார்வையாளராய் நியமிக்கப்பட்ட… அவர்களுடைய மேற்பார்வையில் பூத் கமிட்டி, இளைஞர், இளம் பெண்கள் பாசறை, அதே போன்ற மகளிர் குழுக்கள் எல்லாம் அமைக்கப்படுகின்றது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
‘ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுகிறதாம்’ அந்த ஓநாய்கள் கூட்டம் தான் திராவிட முன்னேற்றக் கழகம். தமிழ்நாட்டை சூறையாடி, சுரண்டி, கொள்ளை அடித்து, சிறுபான்மை மக்களுடைய வாக்குகளை பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக சிறுபான்மை மக்களை ஏமாற்றி… ஆட்சியில் அமர்ந்து, இன்றைக்கு சிறுபான்மை மக்கள் எதிர்பார்ப்புகள் ஒன்றை கூட நிறைவேற்றாத ஒரு சர்வாதிகார அரசு தான் இந்த விடியாத திராவிட முன்னேற்றக் கழக அரசு என விமர்சித்தார்.