நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ளார். 2024 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வாக்காளர் பதிவு அலுவலகத்தில் படிவம் 6ஐ சமர்ப்பிப்பதன் மூலமாக அல்லது https://voters.eci.gov.in என்ற இணையதளம் அல்லது “Voter Helpline App” என்ற செயலியில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 17 வயது பூர்த்தி அடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.