
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் … தமிழகத்தின் பிரபல அன்னபூர்ணா ஹோட்டல் நிர்வாக இயக்குநர் மன்னிப்பு கேட்கும் வீடியோ தமிழகத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்நிலையில் ஒன்றிய அரசும் ஒன்றிய அமைச்சர்களும் தமிழர்களின் மரியாதையை சீண்டாமல் இருக்க வேண்டும் என்று திமுக எம்பி கனிமொழி கூறியுள்ளார்.
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா உணவகத்தின் உரிமையாளர் மன்னிப்பு கேட்ட பின்னரே கனிமொழி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதோடு “பணியுமாம் என்றும் பெருமை சிறுமை அணியுமாம் தன்னை வியந்து” என்ற திருக்குறளையும் கனிமொழி பதிவிட்டுள்ளார்.