உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஆக்ராவை சேர்ந்த மால்தி வர்மா என்பவர் அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்கிறார். இவரை வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் கல்லூரிக்கு செல்லும் அவரது மகள் பாலியல் மோசடி வழக்கில் சிக்கியதாக கூறியுள்ளார். மேலும் மகள் பத்திரமாக வீட்டிற்கு வந்து சேரவும், வழக்கு பதியாமல் இருக்கவும் ஒரு லட்ச ரூபாய் வங்கி கணக்கில் டெபாசிட் செய்ய வேண்டும் என அந்த மர்ம நபர் மிரட்டியுள்ளார்.

இதனால் பயந்த மால்தி வர்மா தனது மகனிடம் இது பற்றி கூறியுள்ளார். உடனே மாருதி வர்மாவின் மகன் இது ஒரு மோசடி செயல் என்பதை கண்டறிந்தார். இது பற்றி தனது தந்தையிடமும் கூறினார். ஆனால் இதனை நினைத்து வருந்தி கொண்டே இருந்ததால்  மால்தி வர்மாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவர் பள்ளியிலிருந்து வீடு திரும்பிய 15 நிமிடங்களில் மாணடைப்பால் உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

“>