4ஆம் தேதி புயல் கரையை கடக்கும் என்று சொல்லப்பட்டிருந்த நிலையில் தற்போது 5ஆம் தேதி கரையை கடக்கும் என்று இந்திய வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.  அதே போல ஏற்கனவே சென்னைக்கு – மசூலிப்பட்டினத்திற்கு இடையே கரையை கடக்கும் என்று சொல்லப்பட்டிருந்த நிலையில் தற்போது நெல்லூருக்கும்,  மசூலிப்பட்டினத்திற்கும் இடையே கரையை கடக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. புயல் இடமாற்றம் ஆகிறது.

அதேபோல  4ஆம் தேதி மாலை கரையை கடக்கும் என்று சொல்லப்பட்டது. தற்போது 5ஆம் தேதி முற்பகல் என மாறி உள்ளது. இதற்கு புறச்சூழல் தான் காரணம். மற்ற இடங்களில் இருக்கக்கூடிய காற்று அழுத்தம், அதேபோல கடற் சார்ந்த அதிர்வுகள்  போன்ற விஷயங்களால் தான் இந்த மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்று சொல்லலாம்.

2.44  மணிக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி,  காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டு உள்ளது. சென்னையில் இருந்து 740 கிலோமீட்டர் கிழக்கு தென்கிழக்கு திசையில் நிலை கொண்டுள்ளது.

இது நாளைக்கு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறப்போகிறது. மூன்றாம் தேதி புயலாக வலுப்பெறும். அதற்குப் பிறகு தெற்கு ஆந்திரா,  வட தமிழகத்தை நோக்கி வரும் என நேற்று வரை   சொல்லப்பட்டு இருந்தது. இன்று காலை தான் கரையை கடக்கும் இடத்தை அறிவித்திருந்தார். அதில் ஒரு சிறு மாற்றம் ஏற்பட்டுள்ளது.

நெல்லூருக்கும்,  மசூலிப்பட்டினம் இடையே ஐந்தாம் தேதி முற்பகல்… தெற்கு ஆந்திரா பகுதியை ஒட்டி கரையை கடக்கும் என சொல்லப்பட்டுள்ளது. புயலாகவே கரையை கடக்கும். அது கரையை கடக்கும் போது 80 – 90 கிலோ மீட்டர் வேகமாக காற்று வீச வாய்ப்பிருக்கின்றது. சமயங்களில் 100 கிலோ மீட்டர் வேகம் வரைக்கும் காற்று வீசலாம் என சொல்லப்பட்டுள்ளது.