
செய்தியாளர்களிடம் பேசிய திண்டுக்கல் லியோனி, தமிழகஆளுநர் திராவிடம் என்கின்ற பழுத்த மரத்தின் மீது பொய் என்கின்ற அந்த கற்களைத் தொடர்ந்து வீசி, அந்த மரத்தை எப்படியாவது கீழே தள்ளி விடலாம் என்று ஐடியா பண்ணுகிறார். ஆனால் கற்களை அவர் வீச வீச அந்த மரத்தில் இருக்கக்கூடிய நல்ல கனிகள் சமூக நீதி, சமத்துவம், மகளிர் விடுதலை போன்ற திராவிட சிந்தனைகள் எல்லாம் மக்களுக்கு தொடர்ந்து போய்க்கொண்டிருக்கும். இதனால் அந்த திராவிட சிந்தனையோ திராவிட சித்தாந்தத்தையும் எந்த விதத்திலும் சாய்த்து விட முடியாது.
அது தொடர்ந்து நிலைத்து நிற்கும் என்பதுதான் பத்திரிக்கையாளளிடம் தெரிவிக்க வேண்டிய முக்கியமான கருத்து. இப்ப நான் கொடுத்திருப்பது வெள்ளை அறிக்கை தான். நீங்க ஒவ்வொரு சுதந்திரப் போராட்ட வீரர்கள் பற்றியும்… அந்த பாட புத்தகத்தை எடுத்து படித்தீர்கள் என்றால், ஒவ்வொருவர் பற்றி தெளிவாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஏறக்குறைய இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள்…. தமிழக விடுதலை போராட்ட வீரர்கள் எல்லோருடைய பட்டியலும் கொடுத்திருக்கிறோம். எந்தெந்த பாடத்தில் இடம் பெற்று இருக்கிறது…. எப்படி இடம்பெற்றிருக்கிறது என்பதை நீங்கள் பாடப் புத்தகத்தை வாசித்தால் தெரியும்… மரியாதைக்குரிய பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை பாட புத்தகத்தை உட்கார்ந்து படித்து பொறுமையாக படித்தால் அதுவே ஒரு வெள்ளை அறிக்கையாக இருக்கும், அப்படி என்பதுதான் என்னுடைய கருத்து என தெரிவித்தார்.