
உலக அளவில் மார்ச் மாதம் 8-ம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. ஒரு காலத்தில் வீட்டு வேலைக்கு தான் பெண்கள் என்று இருந்த நிலை மாறி தற்போது பல்வேறு துறைகளிலும் பெண்கள் சாதித்து வருகிறார்கள். அந்த வகையில் வாழ்வில் சாதித்த சில பெண்கள் குறித்து தற்போது பார்க்கலாம். அதன்படி விண்வெளிக்கு சென்ற முதல் பெண் என்ற பெருமையை பிடித்தவர் கல்பனா சாவ்லா. ஹரியானாவில் பிறந்த கல்பனா சாவ்லா நாசாவுடன் பயணம் மேற்கொண்டு விண்வெளிக்குச் சென்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையை பெற்றவர்.
கடந்த 2003-ம் ஆண்டு விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பும்போது விண்கலம் வெடித்து சிதறிய விபத்தில் கல்பனா சாவ்லா உயிரிழந்தார். கல்பனா சாவ்லா மறைந்தாலும் விண்வெளிக்கு சென்று சாதிக்க வேண்டும் என நினைக்கும் பெண்களுக்கு அவர் தற்போதும் முன்னோடியாக திகழ்கிறார். அதன் பிறகு பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த மலாலா யூசுப் சாய் ஸ்வார்ட் பள்ள தாக்கில் உள்ள சிறுமிகளுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுத்தார். தலிபான்களால் சுடப்பட்ட மலாலா குணமடைந்து வந்த பிறகும் தொடர்ந்து பெண்ணுரிமை தொடர்பாக குரல் கொடுத்தார்.
இவருக்கு கடந்த 2014-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்தது. இந்தியாவின் ராக்கெட் பெண் என்று அழைக்கப்படுபவர் ரிது ஹரிதாஸ். லக்னோவை சேர்ந்த விண்வெளி பொறியாளரான ரிது ஹரிதாஸ் மங்கள்யான் திட்டத்தில் மிக முக்கிய பங்களிப்பை வழங்கியதோடு, சந்திராயன் 2 திட்டத்திற்கு இயக்குனராகவும் விளங்கினார். மேலும் அமெரிக்காவின் மிக சக்தி வாய்ந்த இரண்டாவது பதவியான துணை அதிபர் பதவியில் கமலா ஹாரிஸ் இருக்கிறார். இந்திய ஜமைக்கா தம்பதிகளுக்கு பிறந்த கமலா ஹாரிஸ் அமெரிக்க துணை அதிபர் பதவியில் இருக்கும் முதல் அமெரிக்க பெண்மணி என்ற பெருமையை பெற்றவர். இப்படி பல பெண்கள் பல துறைகளில் சாதித்து வருவதோடு பலருக்கும் முன் உதாரணமாகவும் திகழ்கிறார்கள்.