சர்வதேச அளவில் மார்ச் 8-ம் தேதி மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த மகளிர் தினம் பெண்களை போற்றும் விதமாகவும் பெண்களின் பிரதிநிதித்துவத்தை உணர்த்தும் விதமாகவும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் மகளிர் தினம் எதற்காக கொண்டாடப்படுகிறது. அந்த தினத்தை உருவாக்கியவர் யார்? எப்படி உருவானது? என்பது குறித்து தற்போது பார்க்கலாம். அதாவது 18-ஆம் நூற்றாண்டில் பெண்கள் என்றால் வீட்டு வேலைகளுக்கு மட்டும் தான் என்ற நிலை இருந்தது. இந்த நிலை படிப்படியாக மாறி கடந்த 1850-வது வருடம் பெண்கள் வேலைக்கு செல்ல ஆரம்பித்தார்கள்.

ஆண்களுக்கு நிகராக பெண்கள் வேலை பார்த்த போதிலும் அவர்களுக்கு ஊதியத்தில் பாகுபாடு காட்டப்பட்டது. இதன் காரணமாக கடந்த 1910-ம் ஆண்டு டென்மார்க்கில் உள்ள கோபன் ஹேகனில் பெண்கள் அனைவரும் ஒன்றிணைந்து மாபெரும் போராட்டத்தை நடத்தினர். இந்த போராட்டத்தில் முக்கியமான நபர் ஜெர்மனியைச் சேர்ந்த புரட்சி பெண் கிளாரா ஜெட்கின். இவர் பெண்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்ததோடு பெண்களுக்காக ஒரு தினத்தை கொண்டாட வேண்டும் என வலியுறுத்தி வந்தார். ஆனால் அவருடைய கோரிக்கை நிறைவேறாத நிலையில் வெவ்வேறு தினங்களில் உலக அளவில் பல நாடுகள் மகளிர் தினத்தை கொண்டாடி வந்தது.

அதன் பிறகு கடந்த 1917-ம் ஆண்டு உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் ரஷ்யாவில் பெண் தொழிலாளர்கள் புரட்சி மேற்கொண்டனர். இதனால் அப்போதைய மன்னர் ஆட்சியே கவிழ்ந்தது என்று கூட சொல்லலாம். கடந்த 1920-ம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் நகரில் நடைபெற்ற போராட்டத்தில் ரஷ்யாவை சேர்ந்த அலெக்சாண்ட்ரா கேலன்ட்ரா என்பவர் கலந்து கொண்டார். இந்த புரட்சியை நினைவு கூறும் விதமாக பிப்ரவரி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை மகளிர் தினமாக கொண்டாட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இவர்கள் சொன்ன பிப்ரவரி மாதத்தின் கடைசி ஞாயிற்று  கிழமை கிரிக்கோரியன் காலண்டரின்படி மார்ச் 3-ஆம் தேதி ஆகும். மேலும் அந்த வருடத்திலிருந்து உலகம் முழுவதும் மார்ச் மாதம் 3-ஆம் தேதி மகளிர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.