கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் தீத்திபாளையம் விவேகானந்தர் நகரில் வசிக்கும் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, விவேகானந்தர் நகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம்.

இங்குள்ள 70 சென்ட் அங்கீகரிக்கப்பட்ட மனையை சிலர் போலியான ஆவணங்கள் மூலம் விற்பனை செய்யும் நோக்கத்தோடு ஆக்கிரமித்து விட்டனர். அங்குள்ள கிணற்றையும் காணவில்லை. எனவே ஆக்கிரமித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து ஊராட்சிக்கு சொந்தமான இடம் என அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் எனது மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.