உலக பிளிட்ஸ் செஸ் தொடரின் 14-வது சுற்றில், நார்வேயின் மாக்னஸ் கார்ல்சென் மற்றும் அர்மேனியாவின் ஹேக் மார்ட்டிரோசியன் ஆகியோர் மோதினர்.
ஆட்டத்தின் 69-வது நகர்த்தலின் போது, கார்ல்சென் வசம் வெறும் 2 வினாடிகள் மட்டுமே எஞ்சி இருந்தன. நேர நெருக்கடியில் வேகமாகப் காயை நகர்த்த முயன்ற கார்ல்சென், எதிர்பாராத விதமாகப் பல காய்களைத் தட்டிவிட்டு கீழே தள்ளிவிட்டார்.
¡𝐃𝐑𝐀𝐌𝐀 𝐞𝐧 𝐞𝐥 𝐌𝐔𝐍𝐃𝐈𝐀𝐋! 🚨
Magnus Carlsen pierde su partida directamente después de darle al reloj sin colocar todas las piezas que tiró. 😱 pic.twitter.com/4ad3z1UeHe
— Chess.com en Español (@chesscom_es) December 30, 2025
பிளிட்ஸ் செஸ் விதிகளின்படி, காய்கள் கீழே விழுந்தால் நேரத்தைக் கணக்கிடும் கடிகாரத்தை நிறுத்துவதற்கு முன்பே காய்களைச் சரியான இடத்தில் வைக்க வேண்டும்.
ஆனால், பதற்றத்தில் இருந்த கார்ல்சென், காய்களைச் சீராக வைக்காமலேயே கடிகாரத்தை அழுத்தினார். எதிராளி ஹேக் மார்ட்டிரோசியன் இது குறித்து உடனடியாக முறையீடு செய்ய, நடுவர் கார்ல்சென் தோல்வியடைந்ததாக அறிவித்தார்.
