அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல யூடியூபர் மிஸ்டர் பீஸ்ட் (Jimmy Donaldson), தனது அதிரடியான மற்றும் வினோதமான சவால்களுக்குப் பெயர் பெற்றவர். இந்நிலையில், அவரது சமீபத்திய வீடியோ ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

அந்த வீடியோவில், போக்குவரத்து நெரிசலில் (Traffic Jam) சிக்கித் தவித்த வாகன ஓட்டிகளிடம் சென்று, “உங்களுக்கு 1,000 டாலர்கள் (சுமார் ₹90,000) வேண்டுமா?” என மிகவும் எதார்த்தமாகக் கேட்கிறார். இதை எதிர்பார்க்காத பலரும் ஒரு நிமிடம் திகைத்துப் போனாலும், அந்தப் பணத்தைப் பெற்றுக்கொண்டு நெகிழ்ச்சியில் மிதந்தனர்.

 

View this post on Instagram

 

A post shared by World Latin Star (@worldlatinstar)

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பதிவேற்றப்பட்ட வெறும் 4 நாட்களில், சுமார் 4.6 கோடிக்கும் (46 Million) அதிகமான பார்வைகளைப் பெற்று உலக அளவில் டிரெண்டாகி வருகிறது.

ஒரு சில வாகன ஓட்டிகள் இது ஏதோ கிண்டல் என நினைத்து வேண்டாம் என்று கூறினாலும், பெரும்பாலானவர்கள் அதிர்ச்சியிலும் மகிழ்ச்சியிலும் உறைந்து போயினர்.

ஏற்கனவே ஏழை மக்களுக்குக் கண் அறுவை சிகிச்சை செய்வது, இலவசமாக வீடுகளைக் கட்டிக் கொடுப்பது எனத் தனது பரோபகாரச் செயல்களால் (Philanthropy) புகழ்பெற்ற மிஸ்டர் பீஸ்ட், தற்போது டிராபிக் சிக்னலில் செய்த இந்த உதவி அவரது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.