இந்திய கார் மற்றும் பைக் பந்தய வீராங்கனை ஆன அலிஷா அப்துல்லா கடந்த வருடம் செப்டம்பர் மாதம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜக கட்சியில் இணைந்தார். இவர் பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு மாநில செயலாளர் பொறுப்பில் இருக்கிறார். இந்நிலையில் தற்போது அலிஷா அப்துல்லா அதிமுகவை மறைமுகமாக விமர்சித்து ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார்.

அதாவது பழைய டயரை அதிமுக கட்சியுடன் ஒப்பிட்டு விமர்சித்துள்ளார். அதாவது பல வருடங்களாக ரேஸ் ஓட்டி என்னுடைய காரின் டயர்கள் பழுதாகி தரையில் தவழ்ந்து முதிர்ந்து விட்டது. அதனை தூக்கி போடுவதை தவிர வேறு வழியில்லை என பதிவிட்டுள்ளார். இது எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவருடைய அணியினரை தாக்கி பேசுவது போல் அமைந்திருப்பதால் அதிமுகவினர் தற்போது அலிஷா அப்துல்லாவை விமர்சித்து வருகிறார்கள்.