இந்தியா முழுவதும் தி கேரளா ஸ்டோரி படத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி தி காஷ்மீர் பைல்ஸ் படத்தை தொடர்ந்து தி கேரளா ஸ்டோரி படத்தை ஆதரித்தார். அவர் ஆதரித்த இரண்டு படங்களுக்குமே அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழகத்தில் தி கேரளா ஸ்டோரி படத்தை வெளியிடுவதை தடை செய்ய வேண்டும் என கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தி கேரளா ஸ்டோரி படம் வெளியிடுவதை தடுத்து நிறுத்த வேண்டும். அதையும் மீறி திரைப்படத்தை தமிழ்நாடு அரசு திரையிட அனுமதித்தால் இந்த படம் திரையிடப்படும் ஒவ்வொரு திரையரங்கையும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று பதிவிட்டுள்ளார்.