குழந்தை திருமண குற்றச்சாட்டில் இரு விரல் கன்னித்தன்மை பரிசோதனை என பரவும் தகவல் பொய்யானது என சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் குழந்தை திருமண விவகாரத்தில்பாதிக்கப்பட்ட நான்கு சிறுமிகளில் இரண்டு சிறுமிகள் மட்டுமே மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டார்கள் என்றும், அவர்களிடம் பெண் மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர் என்றும், அவர்களிடம் இரு விரல் கணேத்தன்மை பரிசோதனைக்கு உட்படுத்தவில்லை என்றும் DGP சைலேந்திரபாபு விளக்கமளித்திருந்தார்.

இந்நிலையில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். சிதம்பரம் தீட்சிதர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என ஆளுநர் கூறுகிறாரா? என அமைச்சர் சேகர் பாபு கேள்வி எழுப்பியுள்ளார். தீட்சிதர்களுக்கு என ஏதும் தனி சட்டம் உள்ளதா? ஆளுநர் என்ன ஆண்டவரா?. ஆளுநர் குறிப்பிடுவது போல, சிறுமிகளுக்கு இரட்டை விரல் பரிசோதனை நடத்தப்பட்டது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என பதிலடி கொடுத்தார்.