நானும் ரவுடி தான் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக புதுச்சேரிக்கு புறப்பட்டபோது தன்னுடைய கையில் வெறும் 250 ரூபாய் மட்டுமே இருந்ததாக இயக்குனர் விக்னேஷ் சிவன் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் தான் கிளம்பும் போது அந்த தகவலை இசையமைப்பாளர் அனிருத்திடம் மட்டுமே கூறிவிட்டு சென்றதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் அவர் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த போது அனிருத்திடம் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்ததாகவும் அதில் உங்களுடைய பைக்குள் 50000 ரூபாய் பணம் வைத்துள்ளேன் என்று அவர் கூறியிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த எதிர்பாராத உதவியால் நெகிழ்ந்து போன விக்னேஷ் சிவன் அன்று பேருந்து ஜன்னல் கம்பிகள் நனையும் அளவிற்கு கண்ணீர் விட்டு அழுததாக கூறியுள்ளார். அந்த தருணத்தை தன்னால் வாழ்நாளில் மறக்கவே முடியாது என்றும் தன் வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய பரிசு அனிருத் தான் என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

நண்பர்களுக்குள் இருக்கும் இந்த ஆழமான அன்பு மற்றும் ஒருவருக்கொருவர் செய்து கொள்ளும் உதவி தற்போது சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.