மெக்சிகோவின் அதிபர் அவருடைய சமூகவலைதளத்தில் பதிவிட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி பலரையும் அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது. மெக்சிகோ அதிபர் அவருடைய அதிகார பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புராணக் கதைகளில் வரும் மர்மமான ஆவியின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இரவு நேரத்தில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில் கிளையுடன் கூடிய ஒரு மரத்தில் வெள்ளை நிறத்தில் முடியை கொண்ட விசித்திரமான உருவம் ஒன்று தெரிகிறது.

மேலும் அந்த புகைப்படத்தில் தெரியும் மர்மமான உயிரினத்தின் கண்கள் இரவில் ஒளிரும் நட்சத்திரத்தைப் போல இருக்கிறது. அந்த புகைப்படத்தை ஆராய்ச்சி செய்த ஆய்வாளர்கள் இது உண்மையாகவே எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும் இதில் எந்த ஒரு எடிட்டிங் செய்யப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த புகைப்படத்தில் தெரியும் மர்மமான உயிரானது மாயன் நாகரீகத்தில் கூறப்படும் அலெக்ஸ் என்ற உயிரினமாக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். அலெக்ஸ் என்பது மாயன் நாகரிகத்தில் கூறப்படும் குரங்கு தனமிக்க உயிரினமாகும். காடுகளில் வாழும் இவை மக்களை ஏமாற்றி அவர்களின் பொருட்களை திருடி மறைத்து வைக்கும் என கூறப்படுகிறது. தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.