இந்தியாவின் ஜி 20 மாநாட்டில் பங்கேற்ற ரஷ்ய அமைச்சரை பார்த்து அரங்கத்தில் இருந்த மக்கள் சிரித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் நடைபெற்று வரும் ஜி 20 மாநாட்டில் பங்கேற்க வந்த ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மற்றும் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் இருதரப்பு உறவுகள், விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் அரங்கத்தில் இருந்த மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து வந்த நிலையில் அப்போது ஒருவர் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடைபெறும் போர்கள் ரஷ்யாவின் ஆற்றலை எவ்வாறு பாதித்துள்ளது என்றும் அதனால் ஆசியாவில் உள்ள நாடுகளுக்கு என்ன பயன் என்றும் இந்தியா அதில் எவ்வாறு இடம்பெறப் போகிறது என்றும் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர், நாங்கள் இந்த போரை ஆரம்பிக்கவில்லை என்றும் நாங்கள் நிறுத்த முயலும் இந்த போர் எங்கள் மீது தொடுக்கப்பட்ட போர் என்றும் அவர் கூறிய போது அரங்கத்தில் இருந்த மக்கள் அனைவரும் சிரித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.