தமிழ் சினிமாவில் ஜீவா நடிப்பில் வெளியான ஈ படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியதன் மூலம் பிரபலமானவர் நடிகை சனா கான். அதன் பிறகு தம்பிக்கு இந்த ஊரு, பயணம், ஆயிரம் விளக்கு, சிலம்பாட்டம், தலைவன் மற்றும் அயோக்கியா போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 2020-ம் ஆண்டு குஜராத்தைச் சேர்ந்த முஸ்லீம் அறிஞரான முஃப்தி அனஸ் செய்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கி இருக்கும் சனா கான் தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் மும்பையில் நடந்த இஃப்தார் விருந்தில் முஃப்தி அனஸ் மற்றும் சனாகான் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

அப்போது கர்ப்பமாக இருக்கும் தன்னுடைய மனைவியை முஃப்தி அனஸ் கையைப் பிடித்து தரதரவென இழுத்துச் செல்லும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை பார்த்த பலரும் கர்ப்பமாக இருக்கும் ஒரு பெண்ணை இப்படியா தரதரவனை இழுத்துச் செல்வது என சனா கானின் கணவருக்கு கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இதற்கு நடிகை சனா கான் தற்போது விளக்கம் கொடுத்துள்ளார். அதில் எனக்காக கவலைப்பட்டதற்கு நன்றி. எங்களுடைய கார் டிரைவரை அழைக்க முடியவில்லை. நான் அந்த பகுதியில் நின்றதால் எனக்கு வியர்த்து கொட்டியது. அதனால் எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. எனவே என்னை விரைவாக அழைத்துச் செல்லும் நோக்கத்தில் அப்படி என் கையைப் பிடித்து அழைத்துச் சென்றார் என நடிகை சனா கான் விளக்கம் கொடுத்துள்ளார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)