இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பாஸ்மதி இல்லாத அரிசிகளுக்கு அரசு 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தடை விதித்திருந்தது. இடைத்தொடர்ந்து தற்போது செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி இந்த தடையை மத்திய அரசு நீக்கியது. அரிசிக்கான ஏற்றுமதி விலையும்  நீக்கி உள்ளது.

அரிசியின்  குறைந்தபட்ச ஏற்றுமதி விலை 490 டாலர் (41,200 ரூபாய்) ஆகும். இந்த குறைந்தபட்ச விலையையும் உடனடியாக மத்திய அரசு நீக்கி உள்ளது. இந்த புதிய அறிவிப்பு உடனடியாக அமல்படுத்தப்படும் என வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் கூறியுள்ளது. இதற்கான முக்கிய காரணம் அரிசியின் ஏற்றுமதியை அதிகரிக்க எடுக்கப்பட்டுள்ள முடிவாகும்.