முதுமலை தம்பதி பொம்மன்- பெள்ளி சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். யானைகளை பராமரிக்கும் முதுமலை தம்பதி குறித்து ஆவண குறும்படமான “The Elephant Whisperers”-க்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. இப்படத்தில் நடித்த தம்பதிகள் தான் பொம்மன்-பெள்ளி.

நேற்று படக்குழுவுக்கு டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், இன்று தம்பதியினரை நேரில் சந்தித்து பாராட்டினார். முன்னதாக “The Elephant Whisperers” ஆவண படத்தில் நடித்த பெள்ளிக்கு இபிஎஸ் போனில் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.