தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் ஆரம்பித்துவிட்ட நிலையில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அதிகரிக்கும் வெப்பத்தின் காரணமாக மக்கள் குளிர்ச்சியான பானங்களை அதிக அளவில் விரும்புகிறார்கள். அந்த வகையில் எலுமிச்சை பழச்சாறும் உடலுக்கு குளிர்ச்சி தரும் முக்கியமான பானங்களில் ஒன்றாகும். தற்போது எலுமிச்சை பழங்களின் தேவை அதிகமாக இருப்பதால் அதன் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

சாதாரணமாக ஒரு கிலோ எலுமிச்சை பழம் 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் நிலையில் கடந்த வாரம் 120 ரூபாயாக உயர்ந்தது. இதைத்தொடர்ந்து தற்போது ஒரு கிலோ எலுமிச்சை பழத்தின் விலை 160 ரூபாயாக அதிகரித்துள்ளது. திட்டச்சேரி சந்தையில் ஒரு கிலோ எலுமிச்சை பழம் 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பெரும்பாலான கடைகளில் எண்ணிக்கை அளவில் கொடுப்பதற்கு பதிலாக தற்போது கிலோ கணக்கில் எலுமிச்சை பழங்களை விற்பனை செய்கிறார்கள்.