தமிழகத்தில் பிளஸ் டூ மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் ஆனது கடந்த எட்டாம் தேதி வெளியானது. இதனையடுத்து மாணவர்கள் பலரும் பல கல்லூரிகளில் சேர ஆர்வம் காட்ட வருகின்றனர். பல கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை விண்ணப்பங்களும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2023-24 ஆம் கல்வியாண்டில் முன்னாள் படைவீரர்களை சேர்ந்தவர்களுக்கு மருத்துவம், பொறியியல், பாலிடெக்னிக், ஆசிரியர் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு படிப்புகளில் சேர அரசு இட ஒதுக்கீடு வழங்கி வருகிறது. இந்த இட ஒதுக்கீட்டில் முன்னாள் படை வீரர்களை சார்ந்தவர்கள் விண்ணப்பிக்க மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் சென்று சான்றிதழ் பெறவேண்டும்.

மேலும் இந்த ஒதுக்கீடு பெறுவதற்கு இணையதளம் மூலமாக முன்னாள் படைவீரரின் அசல் படைவிலகு சான்று, அடையாள அட்டை சான்று, சார்ந்தவர்களின் பள்ளி இறுதிச் சான்று, மதிப்பெண் பட்டியல், சாதி சான்று கல்வி நிலையத்தில் பெறப்பட்ட விண்ணப்பம், ஓய்வூதிய ஒப்பளிப்பு ஆணை உள்ளிட்டவற்றோடு விழுப்புரம் மாவட்டம் முன்னாள் படை வீரர் நல அலுவலகம் மின்னஞ்சல் முகவரியான  [email protected]  என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பித்து சான்று பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு 04146-220524 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.