தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று முதல் அடுத்த 5 தினங்களுக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன் பிறகு இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, குமரி, ஈரோடு, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

இதைத்தொடர்ந்து 21-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழையும், கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, குமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் மே 22 முதல் 24-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.