மத்திய அரசு கொண்டுவந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான வழக்கில் நேற்று  உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வில் நாலு நீதிபதிகள் ஆதரவாகவும், நீதிபதி நாகரத்னா மட்டும் எதிராகவும் தீர்ப்பு வழங்கியுள்ளார். பீட்டர் போன்ஸ்,  விடுதலை சிறுத்தை கட்சியைச் சேர்ந்த எம்.பி ரவிக்குமார் என பலரும் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.

இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேல்கொள்ளும் போது முறையாக விதிகள் கடைபிடிக்கப்பட்டுள்ளதா ? மக்கள் பாதிக்கப்பட்டு இருந்தார்களா ?  மக்கள் என்பதெல்லாம் பார்க்கவில்லை என்ற விமர்சனங்களை அவர்கள் தெரிவித்தார்கள். இந்த தொடர்பாக கருத்து கூறிய தமிழக பாஜகவின் மாநில  தலைவர் அண்ணாமலை, 2016ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த  பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்த்து 58 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்கள்

குறிப்பாக நேற்று வந்த தீர்ப்புக்கு எதிராக கருத்து சொன்ன தலைவர்கள் எல்லாம் இதனை ஆரம்பம் முதலே எதிர்த்து கொண்டு தான் இருக்கிறார்கள்.  உச்ச நீதிமன்ற மிக தீர்க்கமாக ஆராய்ந்து  மிக முக்கியமான தீர்ப்பை கொடுத்திருக்கிறார்கள். தீர்ப்பை விமர்சனம் செய்தவர்களின் அனைத்து கேள்விகளையும் உச்சநீதிமன்றம் யோசித்து தீர்ப்பு கூர் உள்ளது.

பணத்தை மாற்றிக் கொள்ள  52 நாட்கள் மட்டும் கொடுத்து இருக்கிறார்கள். பணத்தை மாற்றுவதற்கு 52 நாட்கள் போதுமானது. தமிழ்நாட்டில் இதனை வைத்து அரசியலை செய்தார்கள். பண மதிப்பிழப்பு நடவடிக்கை வந்த பிறகு 2019, 2021 என பல  காலகட்டத்தில் அரசியல் செய்தார்கள். அரசியல் செய்தவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டிய நேரம்.  எனவே தமிழகத்தில் இதை எதிர்த்து அரசியல் செய்தவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்தார்.