வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா ? என்ற கேள்விக்கு பதில் அளித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்,

தேசிய பேரிடர் அப்படிங்கற அறிவிப்பு மத்திய அரசு எப்போதும் பண்ணுவதில்லை.  தமிழ்நாட்டுக்கு மாத்திரமில்ல எந்த மாநிலத்திலும் எது ஆனாலும் அப்படி ஒரு முறை இல்லை. ஆனால் அந்தந்த மாநிலங்களில் ஒரு வேலை இடர் ஏற்பட்டால் அவங்க அதை இது ஒரு  இடர். இதற்கு தேவையான அளவு 10% வரைக்கும்….   பைனான்ஸ் கமிஷனோட ரெகமெண்டேஷன் மூலமாக நீங்க உங்க கையில் இருக்கக்கூடிய எஸ்டிஆர்எப் ல இருந்து செலவு பண்ணலாம்.

அது நீங்க அனோன்ஸ் பண்ணிக்கறதுக்கான வழிமுறைகளை….  பைனான்ஸ் கமிஷன் ரெகமெண்டேஷன் மூலமாக கிடைச்சதன் பெயரில் உள் துறை அமைச்சர் மூலமாக….  ஹோம் மினிஸ்டர் மூலமாக 12 கேட்டகிரி சொல்றாங்க…… பயிரா ? புயலா ? மழையா ? வெள்ளமா? இல்ல பூச்சிகள் மூலமாக வரக்கூடிய……  நார்த் இந்தியா  ராஜஸ்தான் போன்ற இடத்தில்எல்லாம் லோக்கஸ்ட்  என வரும். அது வந்தா மழை  மாதிரி பயிரை தின்னுட்டு  போய்டும்.

அந்த மாதிரி புழு,  பூச்சிகளால் வரக்கூடிய இடரா ? இதெல்லாம் எடுத்து சொல்றதுக்கான வழிமுறையை அவங்க கொடுத்திருக்காங்க. அந்த வழிமுறைகளை உங்க அதிகாரிகள் உங்களுக்கு சொல்லி இந்த மாதிரி நாம க்ளைம் பண்ணலாம்…. நம்ம ஸ்டேட்டஸ்ல ஒரு டிசாஸ்டர் இருக்குன்னு சொல்லி சொல்லலாம்.  அப்படின்னு சொல்லி அவங்க அலோன்ஸ் பண்ணினார்கள் என்றால்,  அப்போ அவுங்களோட எஸ் டி ஆர் எஃப் நிதியில் இருந்து 10%  வரைக்கும்  USE பண்ணிக்க வாய்ப்புள்ளது. இன்னொரு விஷயம் சொல்றேன்…

பேங்க் மூலமா ஒரு வேலை இந்த மாதிரி இடர்ல மாட்டிகிட்டு கஷ்டப்படுறவங்க பேமெண்ட் பண்ண முடியாம இருக்கிறவங்களுக்கு கூட பேரிடர் என மாநில அரசு அறிவிச்சுதுன்னா… ரிசர்வ் பேங்க் மூலமா உங்க ரூல்ஸ்படி அந்த மாநிலம் பேரிடர் என அறிவிச்சி இருக்கு.  அதனால பேங்க் கூட இன்னைக்கு போய் அந்த இடத்துல இருக்கக்கூடிய ரிலீஃப் கொடுக்கணும்னா….

அத வச்சுட்டு கொடுக்க முடியும். ஆனால் ஸ்டேட்ல இதெல்லாம் நாங்க யோசிக்க மாட்டோம்.  இந்த வழிமுறைகளை கையாள மாட்டோம். இந்த வழிமுறைகள் மூலமாக உடனடியாக மக்களுக்கு நிவாரணம் இருக்குறதுக்கான வாய்ப்பு இருக்கிறதை மறந்துவிட்டு…. உடனே டெல்லிக்கு போனேன்...  எனக்கு பணம் கொடுக்கல…… உங்க அப்பன் சொத்தா ? உங்க தாய் சொத்தா ? இந்த பேச்சு எல்லாம் பேசுவதற்கு பதிலாக…  உட்கார்ந்து அதிகாரிகளை வைத்துக்கொண்டு என்ன பண்ணா மக்களுக்கு உடனே நிவாரணம் கிடைக்கும் என்பதை யோசித்தால் ?  எத்தனையோ வழிமுறை இருக்கு. அவங்க சொல்லி இருக்காங்க……  உள்துறை அமைச்சகம்….  இதெல்லாம் பண்ணனுங்க… நேஷனல் டிசாஸ்டர் அனோன்ஸ் பண்ணல….  யாருக்குமே அனோன்ஸ் பண்ணல…. அதற்கான வழிமுறையே இல்லை என தெரிவித்தார்.