இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி. தற்போது ஐபிஎல் மேட்ச் நடைபெற்று வரும் நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே ஆன 24-வது போட்டி பெங்களூரில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்றது. அப்போது மைதானத்தில் நின்ற ஒரு சிறுவன் ஹாய் விராட் மாமா. உங்கள் மகள் வாமிகாவை நான் டேட்டிங் அழைத்துச் செல்லலாமா என ஒரு சாட்டில் எழுதிய வாசகத்தை தாங்கிப் பிடித்திருந்தார்.

இது தொடர்பான புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலான நிலையில் நெட்டிஷன்கள் பலரும் சிறுவனின் பெற்றோரை விளாசி வருகிறார்கள். அந்த வகையில் பிரபல நடிகை கங்கனா ரணாவத்தும் வாமிகாவை டேட்டிங் வைத்த சிறுவனின் பெற்றோரை விளாசியுள்ளார். அவர் அப்பாவி குழந்தைகளுக்கு இது போன்ற முட்டாள்தனத்தை கற்றுக் கொடுக்காதீர்கள். இது உங்களை அநாகரிகமானதாகவும் முட்டாள்தனமாகவும் காட்டுகிறது. இது உங்களுக்கு நல்லது இல்லை என்று பதிவிட்டுள்ளார். மேலும் நடிகை கங்கனாவின் பதிவுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.