சென்னை மாவட்டத்தில் உள்ள ராயப்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் சுரேஷ். இவரது வீட்டில் கணவரை இழந்த பெண் ஒருவர் வேலை பார்த்து வருகிறார். அந்தப் பெண்ணுக்கு 14 வயதில் மகள் உள்ளார். இந்த நிலையில் அந்தப் பெண் குடும்ப சூழ்நிலை காரணமாக தான் வேலை செய்யும் முதலாளியான சுரேஷிடம் 50,000 ரூபாய் கடனாக தருமாறு கேட்டுள்ளார். அதற்கு சுரேஷ் கடன் தருவதாக கூறியுள்ளார். மேலும் அந்தப் பெண்ணின் 14 வயது சிறுமிக்கு செருப்பு வாங்கி தருவதாக கடைக்கும் அழைத்து சென்றுள்ளார்.

கடைக்கு சென்று வந்தபின் படம் பார்ப்பதற்காக தியேட்டருக்கு அந்த சிறுமியை மீண்டும் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு படம் பார்த்துக் கொண்டிருந்த சிறுமியிடம் தவறாக சுரேஷ் நடந்து உள்ளார். இதனால் பதறிய சிறுமி கத்தி கூச்சலிட்டுள்ளார். இதனால் அருகில் இருந்தவர்கள் சுரேஷை பிடித்து அடித்து இழுத்துச் சென்றுள்ளனர். மேலும் இது குறித்து காவல்துறையில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து சுரேஷை  காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.