காட்டு விலங்குகளுடன் விளையாடுவது எவ்வளவு ஆபத்தானது என்பதற்குச் சான்றாக, உயிரியல் பூங்கா ஒன்றில் கரடி கூண்டுக்குள் ஊழியர் ஒருவர் உயிருக்குத் தவித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கூண்டுக்குள் ஏற்கனவே ஒரு ஊழியர் இருக்க, மற்றொருவர் வேகமாக உள்ளே நுழைகிறார். அவர் நுழைந்த அடுத்த நொடியே, அங்கிருந்த கரடி ஒன்று ஆக்ரோஷமாக அவரைத் துரத்தத் தொடங்குகிறது.
அந்த ஊழியர் தனது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள கூண்டுக்குள்ளேயே இங்கும் அங்கும் ஓடுகிறார். ஆனால், அந்த கரடியோ விடாமல் அவரை வேட்டையாடத் துடிக்கிறது. அங்கிருந்த மற்றொரு ஊழியர் கையில் இருந்த தடியை வைத்து கரடியைத் தடுக்க முயன்றார்.
A shocking video from Kunju Zoo in Swat is going viral, showing a terrifying moment when two black bears suddenly chased a caretaker inside the enclosure. The caretaker is seen running for his life as the bears aggressively pursue him. In a close call, he somehow managed to… pic.twitter.com/usFP9PSluY
— Whats In The News (@_whatsinthenews) April 18, 2026
இருப்பினும், ஆக்ரோஷத்தில் இருந்த கரடி எதற்கும் கட்டுப்படாமல் ஊழியரைத் தாக்க முயன்றது. ஒருகட்டத்தில், கரடியின் பிடியில் இருந்து நூலிழையில் தப்பிய அந்த ஊழியர், கூண்டுக்குள் இருந்த மற்றொரு பாதுகாப்பு அறைக்குள் புகுந்து கதவைச் சாத்தினார். ஆத்திரம் குறையாத அந்த கரடி, கதவின் மீது மோதித் தாக்கத் தொடங்கியது.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், வனவிலங்கு ஊழியர்களின் அஜாக்கிரதையைச் சுட்டிக்காட்டி வருவதுடன், “வன விலங்குகளிடம் எப்போதுமே எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என எச்சரித்து வருகின்றனர்.
