அதிமுகவின் அவைத் தலைவர் டாக்டர் தமிழ் மகன் உசேன் மதுரை மாநாட்டில் பேசிய போது கழகத்தினுடைய நிறுவனத் தலைவர், தோழர்களே இரண்டு நிமிடம் தான் பேச போறேன்.  திராவிட இயக்கத்தினுடைய பொன்னான வளர்ச்சியில்…..  திராவிட பேர் இயக்கத்துடைய பரிணாம வளர்ச்சியை…. இந்த மண்ணிற்கு தந்தது மூன்றெழுத்துதான். என் தலைவன் சொன்னான் மூன்றெழுத்தில் என் மூச்சு இருக்கும்,  அது முடிந்த பின்னாலும் என் பேச்சு இருக்கும். உள்ளம் என்றொரு ஊர் இருக்கும், அந்த ஊருக்குள் எனக்கு ஒரு பேர் இருக்கும்.

புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் பாடலுக்கு ஏற்ப இந்த மண்ணிலே மூன்றெழுத்து மந்திரம் தான் நிற்கிறது. நீங்கள் மறந்துவிடக்கூடாது திராவிட பேர் இயக்கத்தினுடைய பரிணாம வளர்ச்சியை இந்த மண்ணிலே உருவாக்கிய மூன்று எழுத்து தான் தந்தை என்று அழைக்கக்கூடிய ”ஈ.வே.ரா” என்ற மூன்று எழுத்து. ”ஈ.வே.ரா” பெரியாருடைய மறைவிற்கு பின்னால் திராவிட பேர் இயக்கத்தை இந்த மண்ணிலே கட்டிக் காப்பாற்றிய மூன்றெழுத்து தான் செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே என்று சொன்ன பாரதி பாடிய இந்த நாட்டை செந்தமிழ் தமிழ்நாட்டு ஆக மாற்றிய மூன்று எழுத்து தான் ”காஞ்சி” என்ற மூன்றெழுத்தில் பிறந்த ”அண்ணா” என்ற மூன்றெழுத்து.

அண்ணா உடைய மறைவுக்கு பின்னால் திராவிட பேர் இயக்கத்தை இந்த மண்ணிலே கட்டி காப்பாற்று,  நம்மையெல்லாம் இந்த அரசியலிலே ஆளாக்கி 17 லட்சம் தொண்டர்களை உருவாக்கி இயக்கத்தைக் கண்ட மூன்றெழுத்து தான் பரங்கிமலை சிங்கம், பார்போற்றும் தங்கம், நம்முடைய அங்கம், இதயத்து மன்னன்,  என் தலைவன் ”எம்.ஜி.ஆர்” என்ற மூன்றெழுத்து. எம்ஜிஆர் உடைய மறைவிற்குப் பின்னால் உலைந்து போன இயக்கத்தை ஊக்கம் பெற செய்து ஒன்றரை கோடி தொண்டர்களை உருவாக்கிய மூன்று எழுத்து தான் புரட்சி புயலாய் கிளம்பிய மூன்று எழுத்து ”அம்மா” ”அம்மா” ”அம்மா” என்ற மூன்றெழுத்து.

அம்மாவுடைய மறைவுக்கு பின்னால் ”மெரினா” என்ற மூன்றெழுத்தில் கண்ணீர் சிந்தி கொண்டிருந்தோம். அந்த நேரத்திலே தான் நான் இருக்கிறேன் என்று தென்றலாக… புயலாக… புரட்சி நாயகனாக… புரட்சித் தலைவனாக… புறப்பட்டு வந்த மூன்று எழுத்து தான் ”சேலம்” என்ற மூன்றெழுத்தில் பிறந்த ”இபிஎஸ்” என்ற மூன்றெழுத்து. அந்த இபிஎஸ் என்ற மூன்றெழுத்து ”மதுரை” என்ற மூன்றெழுத்தில் கால் பதித்திருக்கிறது. ”மாநாடு” என்ற மூன்றெழுத்து ”வெற்றி” என்ற மூன்றெழுத்தோடு நடைபெற வேண்டும் என்று கேட்பது உங்கள் தொண்டன் ”குமரி” என்ற மூன்றெழுத்தில் பிறந்த ”தமிழ்’‘ மூன்றெழுத்து ”மகன்” மூன்றெழுத்து ”உசேன்” மூன்றெழுத்து ”நன்றி” என்ற மூன்றெழுத்தோடு விடைபெறுகிறேன், நன்றி வணக்கம் என பேசி முடித்தார்.