சட்டமன்ற உறுப்பினர் திண்டுக்கல் ஸ்ரீனிவாசன் அவர்கள் மாநாட்டில் பேசிய போது அருமைத் தோழர்களே…. நம்முடைய கதாநாயகன், அடுத்த முதலமைச்சர், நம்ம எல்லாம் வாழவைக்கின்ற தெய்வம் எடப்பாடியார் அவர்களுக்கு இங்கே நாமெல்லாம் கூடி  இருக்கிறோம். காலை 8 மணிக்கு ஆரம்பித்த இந்த புரட்சி ஒன்பது மணி நேரம் 10 மணி நேரமாக  நடந்து கொண்டிருக்கிறது.

புரட்சித் தலைவர் எம்ஜிஆர் இருக்கும்போது,  அறிஞர் அண்ணா அவர்கள் இருக்கின்ற போது…  எம்ஜிஆர் பேசுவதற்கு முன்னால் யார் பேசினாலும் பேச வேண்டாம். எம்ஜிஆர் பேச சொல்லுங்கள்,  எம்ஜிஆர் பேச சொல்லுங்கள் என்பார்கள். இன்னைக்கி நீங்கள் அத்தனை பேரும் எடப்பாடியாரை பேச சொல்லுங்கள், எடப்பாடி யாரை பேச சொல்லுங்கள் என சொல்லுறீங்க.

அதுதான் நம்முடைய கட்சிக்கே கிடைக்கிற வெற்றி. நீங்கள் கொடுக்கிற செய்தி ஸ்டாலினுக்கு போக வேண்டும்.தோழர்களே ஒரு வருடத்திற்கு முன்பாக ஒரு பொதுக்குழுவிலே நாங்கள் எல்லாம் தீர்மானம் நிறைவேற்றி தம்பி சி.வி சண்முகத்திடம் கொடுத்தோம். அதிலே ஒருங்கிணைப்பாளர் பதவி ஒழிக்கப்பட்டு இடைக்கால பொதுச்செயலாளராக அண்ணன் எடப்பாடியார் அவர்களை தேர்ந்தெடுத்தோம்.

நிரந்தர பொதுச் செயலாளர்.. இப்போ உச்சநீதிமன்றம். உயர்நீதிமன்றம் அத்தனையுமே மாண்புமிகு எடப்பாடிதான் இந்த கட்சிக்கு தலைவர் தலைவர் என்று சொல்லியிருக்கிறார்கள். நாம் இந்த செய்தியை இரண்டு மாதமாக தமிழ்நாடு முழுவதும் கொண்டு சென்று நிகழ்ச்சியை நடத்தினோம். இன்றைக்கு தென் தமிழ்நாடு திருநெல்வேலி வரை மதுரையில் இருந்து எங்களுக்கு ஆதரவு இல்லை. எடப்பாடி யாருக்கு ஆதரவில்லை என்று சொன்னார்கள்.

ஆனால் திருநெல்வேலி,  தூத்துக்குடி அனைத்து மண்ணிலும் எடப்பாடிக்கு தான் எங்களின் ஆதரவு  என்று நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள் தோழர்களே.  நம்முடைய எடப்பாடி யார் அவர்களை எதிர்ப்பவர்களுக்கு நான் கேட்கிறேன். அரசியல் ஆண்மை இருந்தால் இதே மாநாட்டை… இதே மதுரையை… நீ எங்களுக்கு நடத்தி  காட்டு.

இதேபோன்று ஒரு மாநாட்டை நடத்திவிட்டால் நாங்கள் அரசியலை விட்டே போகிறோம். நம்முடைய அத்தனை முயற்சியும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலோடு, சட்டமன்றத் தேர்தலோடு… நம்முடைய முதலமைச்சராக மாண்புமிகு எடப்பாடி அவர்கள் வரவேண்டும் என்றும்,  அவருக்கு உழைக்க வேண்டும் என்றும்கேட்டு அத்தனை பேருக்கும் வாய்ப்புகளை வழங்கியதற்கு நன்றி கூறி விடைபெறுகிறேன் நன்றி வணக்கம் என பேசி முடித்தார்.