
பிரபல இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் பின்னணியில் உள்ள குழு இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது 19ஆவது சீசனை தொடங்கிய வரும் நிலையில் இந்நிகழ்ச்சியின் தொகுப்பாளரான அபிஷேக் முகர்ஜி இந்த 17 ஆண்டுகளில் தான் கண்ட மிகவும் உணர்ச்சிவசப்பட்ட தருணங்களை பகிர்ந்து கொண்டார்.
குரல் கலைஞர் விஜய் விக்ரம் சிங் தொகுத்து வழங்கிய பாட்காஸ்டில் பேசிய அவர் கூறியதாவது, ஒரு பிரபல நடிகை கடினமான பிரிவிற்கு பிறகு வீட்டிற்குள் நுழைந்தார். அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த போது வீட்டில் உள்ள மற்றொரு தோழரை காதலித்தார். பின்னர் அவரது ஆர்வம் உண்மையானதாக இல்லை என்பதை அறிந்து கொண்ட நடிகை ஒரு நாள் வீட்டிற்குள் வைத்து தற்கொலை செய்து கொண்டார்.
இதை கேட்டு பதறி அடித்து ஓடி வந்த நாங்கள் அங்குள்ள மருத்துவரை வர வைத்தோம். அதன் பின் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மீட்கப்பட்டார் என்று பகிர்ந்து கொண்டார்.