செய்தியாளர்களிடம் பேசிய தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மக்கள் வெயிட் பண்ணிட்டு இருக்காங்கல்ல.. 9 வருஷமா 15 லட்சம் எப்போ வரும்னு காத்துகிட்டு இருக்காங்கல்ல.  கருப்பு பணத்தை மீட்டால்.. ? அப்படியென்றால்… பாஜக இன்னும்  கருப்பு பணத்தை மீட்கவில்லையா ? 9 வருஷமா மீட்டகவே இல்லை.

 இன்னும் மீட்கல… ஒன்பது வருஷத்துல மீட்கவே இல்ல அப்படி தானே. அப்போ ரூ.1000, ரூ. 500 ரூபாய் நோட்டுக்களை நிறுத்திவிட்டு, புதிய 2000 ரூபாய் கொண்டுவந்த போது, கருப்பு பணத்தை எல்லாம் ஒரே நாளில்  முடிச்சிருவோம்ன்னு சொன்னாங்க. ஆனால் இப்போ கருப்பு பணத்தையும் மீட்கல, ரூபாய் 15 லட்சத்தையும் கொடுக்கல.

அப்போ என்னத்துக்கு 1000 ரூபாய்  நோட்டை கேன்சல் பண்ணீங்க..? இப்போ 2000 ரூபாய் நோட்டையும் கேன்சல் பண்ணிருவாங்கன்னு  சொல்லிட்டு இருக்காங்க, ஜாக்கிரதையா இருங்க என தெரிவித்தார். ஒன்றிய பிரதமர் மோடி  ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுவதாக தகவல் வருது. அதை எப்படி பாக்குறீங்க? தமிழ்நாட்டை போகஸ் பண்ணுவாங்கன்னு  நினைக்கிறீங்களா? என்ற கேள்விக்கு,

அவர் ( மோடி ) சொன்னாரா உங்க கிட்ட என பதில் சொல்ல, எந்த பேப்பர்ல வந்துச்சி, நான் பார்க்கல என பதில் அளித்தார். கொடநாடு விவகாரத்துல தமிழக அரசு நடவடிக்கை எடுக்கணும்.. தேர்தல் வாக்குறுதில சொல்லி இருந்தீங்க.  பன்னீர்செல்வம் அவர்களும் இதற்க்கு  ஆர்ப்பாட்டம் அறிவிப்பேன்னு சொல்லி இருக்காங்க… நீங்க அவங்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.