செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  டீசல் மானியம் நான்கு ரூபாய்….  டீசல் மானியம் கொடுத்துவிட்டு போக வேண்டியது தானே….  டீசல் மானியம் கொடுக்கவில்லை….. எங்கள் ஆட்சியில் விசை படகுக்கு  டீசல் மானியம் 1500 ரூபாய் இருந்ததை 1800 ஆக மாற்றினோம். அப்போ மீனவர்கள் என்ன சொன்னார்கள் ? சிலர் சூழ்நிலையால் நிர்ணயிக்கபட்ட  காலக்கெடுவில்   டீசல் வாங்கவில்லை என்றால்,

அடுத்த மாதம் நாங்கள் போட்டுக் கொள்கிறோம் என்று சொன்னார்கள். அது நல்லது தானே…  1800 லிட்டர்  எப்படி இருந்தாலும்,  அவர்கள் யூஸ் பண்ணி கொள்ளட்டும்… அதனால எல்லா அதிகாரிகளுக்கும் நாங்க ஒரு உத்தரவு போட்டோம்…  அந்த மாசம் பிடிக்கவில்லை என்றாலும்,  அடுத்த மாசம் அவர்கள் வாங்கிக் கொள்ளலாம் என்று சொன்னோம்… சந்தோஷப்பட்டார்கள்…. இப்போ என்னவென்றால்,  அந்த மாசத்திற்குள் இருக்கின்ற டீசலை உபயோகிக்க வேண்டும். இல்லை என்றால்…

மீனவர் சங்கம் தலைவரு சொன்னாரு ராமேஸ்வரத்தில் இருந்து எனக்கு போன் பண்ணார்கள்… பேட்டி கொடுக்கும் போது தயவு செய்து சொல்லுங்கள் என்று சொன்னார். அவரு சொல்லுவது…. எங்களுக்கு சேர வேண்டிய டீசல் மானியத்தை…. அதை  நாங்கள் அடுத்த மாதம் கூட யூஸ் பண்ணிப்போம்…..  எங்களுக்கு கொடுக்காமல்,  அந்த டீசலை வெளிமார்க்கெட்டில் விற்கிறார்கள்….  அதனால் லட்சக்கணக்கான ரூபாய் அவர்களுக்கு புரள்கின்றது. இதுல அரசியல் ரீதியாகவும் பணம் போகிறது என்று சொல்லியவர் மீனவ சங்க தலைவர் எம்ரிஜ்.

மீனவர்களுக்கு அளித்த கோரிக்கை எதைவும் நிறைவேற்ற வில்லை…  தெரியாமல் எல்லை தாண்டிய மீனவர்களை கொண்டு வர நடவடிக்கை எடுக்கவில்லை.  படகுகள் எல்லாம் மூழ்கடிக்கப்படுத்து. அதற்கு எந்தவிதமான நிவாரணமும் கொடுக்கவில்லை. கொண்டு வர முடியாத  படகுகளுக்கு  ஒவ்வொரு படகுகளுக்கும் 5 லட்சம் கொடுத்தோம்…  இந்த அரசாங்கம் கொடுத்ததா ? விலைவாசி ஒரு பக்கம் இஷ்டம் போல ஏறிட்டே போகுது.. அதை கட்டுப்படுத்தய நடவடிக்கை இல்லை என தெரிவித்தார்.