தெலுங்கில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் நாகார்ஜுனா, தமிழில் ரட்சகன், தோழா, பயணம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இவர் பழம்பெரும் நடிகரான நாகேஸ்வரராவின் மகன் எனும் அந்தஸ்தோடு திரையுலகில் அடியெடுத்து வைத்து முன்னணி கதாநாயகனாக உயர்ந்தார். மேலும் இந்தி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இதனிடையே நாகார்ஜுனாவின் மகன்கள் நாக சைதன்யா, அகில் போன்றோரும் நடிகர்களாக இருக்கின்றனர்.

தெலுங்கில் பல புது கதாநாயகர்கள் அறிமுகமாவதால் மூத்த நடிகர்களுக்கு வாய்ப்பு குறைந்து இருக்கிறது. தொடர் தோல்வி படங்களால் சில காலம் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த நாகார்ஜுனா இப்போது பிரசன்ன குமார் இயக்கும் படம் வாயிலாக மீண்டும் நடிக்க வந்துள்ளார். 63 வயதாகும் நாகார்ஜுனாவுக்கு இப்படத்தில் ஜோடியாக 26 வயது இளம் கதாநாயகியான மானசா நடிக்கிறார். தன்னை விட 37 வயது குறைந்த நடிகையுடன் நாகார்ஜுனா ஜோடி சேர்வதை சமூகவலைத்தளத்தில் ரசிகர்கள் பலரும் விமர்சித்தும், கேலி செய்தும் பதிவுகள் வெளியிட்டு வருகின்றனர்.