இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களாக விளங்குபவர்கள் ரஜினி மற்றும் கமல். நடிகர் ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை தொடர்ந்து தலைவர் 171-வது திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஏற்கனவே நடிகர் ரஜினியின் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவதாக இருந்த நிலையில் சில காரணங்களால் அப்படம் பண்ண முடியாமல் போனது.

அதாவது நடிகர் கமல் தன்னுடைய ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலமாக லோகேஷ் மற்றும் ரஜினி நடிக்கும் படத்தை தயாரிப்பதாக இருந்தார். ஆனால் அவரால் அப்போது ஒரு படத்தை தயாரிக்கும் அளவுக்கு சூழல் இல்லாததால் விஜய் டிவி மகேந்திரனுடன் இணைந்து அப்படத்தை தயாரிக்க கமல் முடிவு செய்தார். ஆனால் நடிகர் ரஜினி நீங்கள் மட்டும் தயாரிப்பதாக இருந்தால் நான் நடிக்கிறேன் என்று கமலிடம் கூறிவிட்டாராம். அந்த சமயத்தில் கமலால் படத்தை தயாரிக்க முடியவில்லை. இதனால்தான் ரஜினி மற்றும் லோகேஷ் இணையும் படம் தள்ளிப் போனது. மேலும் தற்போது லோகேஷ் மற்றும் ரஜினி இணையும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கிறது என்று கூறப்படுகிறது.