பேரறிஞர் அண்ணாவைப் பற்றி பாஜகவின் தமிழ் மாநில தலைவர் அண்ணாமலை பேசிய விவகாரத்தில் அதிமுகவுக்கும் – பாஜகவுக்கும் ஏற்பட்ட மோதல் கூட்டணியை காலி செய்துவிட்டது. இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அண்ணாமலைக்கு தலைவராக இருக்க எந்த தகுதியும் கிடையாது. பாஜகவிற்கு தமிழகத்தில் நோட்டாவை விட கீழே தான் வாக்கு கிடைக்கும். பாஜகவுக்கு சொந்தமாக நிற்க கால் கிடையாது. நாங்கள் ஏன் அவர்களை தூக்கி சுமக்க வேண்டும் ?
தற்போது தற்போதைய நிலையில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று தெரிவித்தார். மேலும் அண்ணாமலை தனது பேச்சை இதோட நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் நாங்களும் திருப்பி பதிலடி கொடுப்போம். நான் சொல்வது தான் கட்சியின் கருத்து என்று ஜெயக்குமார் கூறியதை தொடர்ந்து , அதிமுக – பாஜக கூட்டணி முடிவுக்கு வந்துள்ளது.
இதனை அதிமுகவினர் உற்சாக கொண்டாடி வருகின்றனர்.#நன்றி_மீண்டும்வராதீர்கள் வராதீர்கள் என்று ஹேஷ்டகை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.