அதிமுக சார்பில் தன்னுடைய முக்கிய நிலைப்பாடுகளை டெல்லி பாஜக மேல் இடத்தில் விளக்க வேண்டும் என்றால் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரையைதான் டெல்லிக்கு அனுப்புவார். நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக சின்னம் யாருக்கு கிடைக்கும் பாஜக ஆதரவு யாருக்கு என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் அந்த சமயத்தில் தம்பிதுரை பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அதன் பிறகு நடந்தது எல்லாம் எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாகவே இருந்தது. இந்நிலையில் தற்போதும் தம்பிதுரை பிரதமர் மோடியை சந்தித்து பேசியுள்ளார். பாஜகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் விலகி அதிமுகவில் இணைவதால் பாஜக மற்றும் அதிமுக இடையே சலசலப்புகள் நிலவி வருகிறது.

எடப்பாடி பழனிச்சாமியின் உருவப்படத்தை பாஜகவினர் எரிப்பது அதிமுகவினர் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் கூட்டணியில் விரிசல் இல்லை என இரு கட்சியினரும் கூறி வருகிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் தம்பிதுரை பிரதமர் மோடியை சந்தித்து முக்கியமான அரசியல் நிகழ்வுகள் குறித்து பேசி உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் நெருங்கிய வட்டாரங்கள் தம்பிதுரைக்கு பிறந்தநாள் என்பதால் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து அவர் வாழ்த்து பெற்றுள்ளார் என்று கூறுகிறார்கள். மேலும் உண்மையான காரணம் எதுவென்று தெரியாது நிலையில் தம்பிதுரையை பிரதமர் மோடியை சந்திக்க பேசியதால் எடப்பாடி பழனிச்சாமி ஏதேனும் முக்கிய காரணத்திற்காக அவரை அனுப்பி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.