தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத முன்னணி டைரக்டராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனியிடம் பிடித்துள்ள இவர் இப்போது விஜய் நடிப்பில் உருவாகும் “லியோ” படத்தை இயக்கி வருகிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் விஜய் உடன் இணைந்து திரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், கௌதம் மேனன், மிஷ்கின் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் முதல்கட்ட சூட்டிங் காஷ்மீரில் நடந்து முடிந்தது. இந்நிலையில் லியோ படத்தின் சென்னை சூட்டிங் மே 1 முதல் தொடங்க இருப்பதாகவும் இந்த படப்பிடிப்பு ஒருமாத காலம் இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. அதோடு இந்த படப்பிடிப்பில் விஜய்யுடன் இணைந்து திரிஷா மற்றும் சஞ்சய் தத் உள்ளிட்டோரின் காட்சிகளை படமாக்க படக்குழு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.