தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக வெளிவர இருக்கும் படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான், கவுதம் மேனன் உட்பட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு இப்போது ஜம்மு காஷ்மீரில் நடந்து வருகிறது.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஏற்கனவே நிலநடுக்கம் ஏற்பட்டு வரும் நிலையில், தற்போது இந்தியளவில் இப்படி நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இவ்வாறு ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தால் லியோ திரைப்படத்தின் சூட்டிங் நிறுத்தப்படுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்து உள்ளது.