அறிமுக டைரக்டரான விக்னேஷ் ஷா பி.என் எழுதி, இயக்கியிருக்கும் படம் தான் “சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்”. இப்படத்தில் மிர்ச்சி சிவா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் மற்றும் அஞ்சு குரியன் நடித்து இருக்கின்றனர். சிறிய இடைவேளைக்கு பின் பாடகர் மனோ முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். அதோடு இவர்களுடன் மா.கா.பா.ஆனந்த், பக்ஸ், ஷா.ரா, மொட்டை ராஜேந்திரன், கல்கிராஜா, கே.பி.ஒய்.பாலா உட்பட பலர் நடித்து உள்ளனர்.

பேண்டஸி ரொமாண்டிக் காமெடி ஜானரில் தயாராகி உள்ள இப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பாக கே.குமார் தயாரித்திருக்கிறார். ஆர்தர்.ஏ.வில்சன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு, லியோன் ஜேம்ஸ் இசை அமைத்துள்ளார். அண்மையில் இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. கூடிய விரைவில் டிரைலர் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்து உள்ளது. அந்த வகையில் “சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்” படம் வரும் பிப்ரவரி 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.