தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இப்போது இவர் தென்னிந்திய சினிமாவை தாண்டி ஹிந்தியிலும் படங்கள் நடித்து வருகிறார். ஷாருக்கான்- அட்லீ கூட்டணியில் உருவாகும் ஜவான் திரைப்படத்தில் அவர் வில்லனாக இப்போது நடித்து வருகிறார். தமிழ் திரைப்படங்களில் சுமார் 8-10 கோடி சம்பளமாக வாங்கி வந்த விஜய் சேதுபதி இப்போது ஹிந்தி படம் என்பதால் 21 கோடி ரூபாய் சம்பளமாக பெறுகிறாராம்.

இவரின் மொத்த சொத்து மதிப்பு ரூ.110 கோடி இருக்கும் என தெரிகிறது. விஜய் சேதுபதி சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வீடுகள் வைத்திருக்கிறார். அதோடு வளசரவாக்கம் பகுதியிலும் அவருக்கு வீடு இருக்கிறது. மேலும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அவருக்கு சொத்து உள்ளதாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி அவர் பல்வேறு சொகுசு கார்களை வைத்து இருக்கிறார்.

# BMW7: Rs. 1.60 crores

# Mini Cooper: Rs.40 lakh

# Toyota Fortuner: Rs.35 lakh

# Toyota Innova: Rs.20 Lakh

# Hyundai Grand i10: Rs.7.6 lakh