லோகேஷ் கனகராஜ் டைரக்டில் விஜய் நடிக்கும் படம் “தளபதி 67”. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கவுள்ள நிலையில், இதில் நடிக்கவுள்ள கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. அதன்படி ப்ரியா ஆனந்த், சஞ்சய் தத், சாண்டி மாஸ்டர், மன்சூர் அலிகான், திரிஷா ஆகியோர் இப்படத்தில் நடிக்க உள்ளனர். இந்நிலையில் இந்த படத்தின் சூட்டிங்கின்போது விஜய் உடன் இயக்குனர் மிஸ்கின் நெருக்கமாக பழகி வருகிறார் என சொல்லப்படுகிறது.

மிஸ்கின் காமெடியாக பேசுவது தளபதிக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இதனால் சூட்டிங் இல்லாத நேரங்களில் மிஸ்கினுடன் விஜய் நேரம் செலவழித்து வருகிறார். இத்தகவலை அறிந்த ரசிகர்கள் சிலர், விஜய்க்கு மிஸ்கினை பிடித்துவிட்டதால் எங்கே அடுத்த படத்தை இயக்க அவருக்கு கால்ஷீட் கொடுத்திடப் போறார் என பதறி வருகின்றனர். இதனிடையே விஜய் நடிப்பில் வெளியாகிய யூத் திரைப்படத்தில் மிஸ்கின் உதவி இயக்குனராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.