தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ் தற்போது தளபதி 67 படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் நடிகை திரிஷா பல வருடங்களுக்கு பிறகு விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். அதன் பிறகு நடிகர் அர்ஜுன், சஞ்சய்தத், சாண்டி மாஸ்டர், கௌதம் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ் போன்ற பிரபலங்கள் நடிக்கிறார்கள்.இந்த படத்தின் பூஜை அண்மையில் சிறப்பாக நடைபெற்ற நிலையில், தளபதி 67 படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாவதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் நிலையில், இன்று  மாலை 5 மணிக்கு தளபதி 67 படத்தின் டைட்டில் வெளியாகும் என லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளார். இந்நிலையில் தளபதி 67 திரைப்படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமை தொடர்பான அப்டேட் வெளியாகியுள்ளது.

அதன்படி தளபதி 67 படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவியும், டிஜிட்டல் மற்றும் ஓடிடி உரிமையை netflix நிறுவனமும், ஆடியோ வெளியீட்டு உரிமையை சோனி மியூசிக் நிறுவனமும் கைப்பற்றியுள்ளது.  இந்த தகவலை படகுழு தற்போது போஸ்டர் வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் பல கோடி ரூபாய்க்கு சேட்டிலைட், டிஜிட்டல் மற்றும் இசை உரிமை போன்றவைகள் விநியோகம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.