டைரக்டர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகி இருக்கும் “லவ் டுடே” படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் ஓடிடி தளத்திலும் வெளியாகி வரவேற்பு பெற்றது. இதற்கிடையில் ஏற்கனவே பிரதீப் ரங்கநாதன் சில சர்ச்சைகளில் சிக்கியிருக்கிறார். இந்த நிலையில் ரஜினிகாந்த் குறித்த ஒரு சர்ச்சையில் பிரதீப் ரங்கநாதன் மீண்டுமாக சிக்கியுள்ளார்.

அந்த வகையில் ரஜினி ரசிகர்களை மெண்டலான்ஸ் என குறிப்பிட்டுள்ள டுவிட்டை லைக் செய்துள்ளார் பிரதீப் ரங்கநாதன். முன்னதாக நடிகர் விஜய், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் குறித்து தனது சமூகவலைதள பக்கத்தில் அவதூறாக பதிவிட்டிருந்தார் பிரதீப் ரங்கநாதன். அதனை தொடர்ந்து தான் புரியாமல் ஒரு வேகத்தில் அப்பதிவுகளை வெளியிட்டதாக சொல்லி பிரதீப் ரங்கநாதன் விளக்கமளித்தார். இந்த நிலையில் ரஜினி ரசிகர்களை சீண்டி பார்க்கும் அடிப்படையில் மெண்டலான்ஸ் என்ற பதிவை பிரதீப் ரங்கநாதன் லைக் செய்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.