
13 வருடங்களுக்கு முன் விஜய்-ரஜினி சம்பளம் குறித்த தகவல் இணையத்தில் பதிவிடப்பட்டு வைரலாகி வருகிறது.
சூப்பர் ஸ்டார் என தமிழக மக்களால் செல்லமாக அழைக்கப்படும் ரஜினிகாந்த் தனது சினிமா பயணம் தொடங்கியது முதல் தற்போது வரை உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார். இன்றும் பிற உச்ச நட்சத்திரங்கள் படங்களோடு ரஜினி படங்கள் வெளியானால் அதற்கு சற்றும் சலைக்காமல் கூட்டம் ரஜினி படத்திற்கு செல்லும் வகையில் தனக்கான தனி ஸ்டைல் மூலம் ரசிகர்களை கட்டி போட்டு உள்ளார் ரஜினிகாந்த். இருப்பினும்,
ரஜினிகாந்த் அவர்களே சில மாதங்களுக்கு முன்பாக ஒரு மேடையில், சில தினங்களுக்கு முன்பு காரில் சென்று கொண்டிருக்கும்போது போக்குவரத்து காவல்துறையினர் தன்னை நிறுத்தி மிகப்பெரிய நடிகர் ஒருவர் செல்வதாகவும், ரசிகர் கூட்டம் அவருக்கு அதிகமாக இருப்பதால் நீங்கள் சற்று காத்திருந்து செல்லுமாறும் அறிவுறுத்தினர்.
நான் ஒரு காலத்தில் உச்ச நட்சத்திரமாக இருந்தேன். தற்போது அந்தக் காலம் இன்னொருவர் கையில் சென்று இருக்கிறது. இதுதான் நேரம், காலம் என பேசி இருந்தார். அவர் குறிப்பிட்டு எந்த ஒரு நடிகர் பெயரையும் சொல்லவில்லை. எனினும் விஜய் ரசிகர்கள் அதை விஜய்க்கு சொன்னதாக எடுத்துக்கொண்டு பலவிதமான வீடியோக்களை எடிட் செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வைரலாக்கி வந்தனர். அந்த வகையில்,
தற்போதைய ரஜினிகாந்த் அவர்களின் சம்பளமும் விஜய் அவர்களின் சம்பளமும் ஒப்பிடப்பட்டு சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வருகிறது. அதில், நடிகர் ரஜினிகாந்த் தற்போது ரூ 80 லிருந்து ரூ 90 கோடி சம்பளம் வாங்குகிறார். நடிகர் விஜய் ரூ200 கோடி வாங்குகிறார். ஆனால் 2010ல் ரஜினிகாந்த் அவர்களுக்கு 25 கோடி ரூபாய் சம்பளம். நடிகர் விஜய் -க்கு ரூ 7 கோடி ரூபாய் சம்பளமும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
தமிழ் சினிமாவில் யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். இன்றளவும் சூப்பர் ஸ்டார் பட்டத்தில் நிலைத்து நிற்கும் ரஜினிகாந்த் அவர்களை விட நூறு மடங்கு அதிகமான சம்பளம் என்பது சாதாரண விஷயம் அல்ல. நடிகர் விஜய் உண்மையான ரோல் மாடல் தான் என பதிவிட்டு பகிர்ந்து வருகின்றனர்.
2010 : #Vijay‘s salary is 7cr and #Rajni‘s salary is 25cr 2023 : #Vijay‘s salary is 200cr and #Rajni‘s salary is 80cr
Who thought #Vijay would overtake #Rajni with atleast 100cr salary margin..
This man @actorvijay is truly an inspiration 🙏🐐 pic.twitter.com/58bt3LJQUj
— Arun Vijay (@AVinthehousee) July 7, 2023