ஸ்டீவ் ஜாப்ஸ்ம் ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் பிரபல தொழிலதிபர் ஆவார். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு உயிரிழந்துவிட்டார். இவரது மனைவி லாரென் பாவெல் ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டவராக இருந்து வருகின்றார்.

இந்நிலையில் இவர் உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியிலுள்ள பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோவிலுக்கு வருகை தந்து சாமியை தரிசனம் செய்துள்ளார். இவருடன் நிரஞ்சனி அகாரா ஆசிரமத்தை சேர்ந்த கைலாஷ் ஆனந்த் மகாராஜ் உடன் வந்துள்ளார். இவர்கள் மேலும் சில நாட்கள் இந்தியாவில் தங்கியிருந்து மகா கும்ப மேளாவில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.